திட்டித் தீர்க்கும் முன்

குரங்குகளை வைத்து வித்தைகாட்ட குரங்குகளோடு வீதி வந்தேன்.
குரங்குகள் எல்லாம் அது அது இஷ்டத்திற்கு நடக்கத் தொடங்கிவிட்டன.
வேடிக்கை பார்க்க வந்தவர்களெல்லாம் என்னையே திட்டத்தீர்த்தார்கள்.
அவர்கள் திட்டுகளுக்கு நன்றி.

அரசாங்கம் என்பதும் இப்படி தான்.
ஒருவன் தன்னை தலைவனாக பிரகடனப்படுத்திக் கொண்டு ஊர் கூடி தேர் இழுப்போம் வருங்கள் என்றான்.
வந்தவர்களெல்லாம் தங்கள் இஷ்டப்படி ஆளுக்கொரு பக்கமிழுக்க தேர் நகரவே இல்லை.
ஊரார் கூடி தேரிழுக்க அழைத்தவனைத் திட்டித்தீர்த்தார்கள்.
அந்த திட்டுகளுக்கு நன்றி.

எல்லாம் கடைப்பிடிப்போம் என்றே சட்டம் கொண்டு வந்தபின்பும் அவரவர் ஆசைக்காக சுயநலனுக்காக சட்டத்தை மீறத் தொடங்கிவிட்டார்கள்.
சட்டத்தை படித்து அதை விற்றுபிழைக்கவும் கூட்டங்கள் தயாராகிவிட்ட நிலையில் சரியான தீர்ப்பு வரவில்லை என்று எலலாரும் கூடி நீதி மன்றத்தை திட்டித் தீர்த்தார்கள்.
திட்டித் தீர்ப்பவர்களுக்கு நன்றி.

அழகு ஓவியங்கள் பொதுவில் வரையப்படுகின்றன.
ஆனால், அவற்றை காண்பது குற்றம்.
உன்னை இழுக்கவே உடையணிந்து வருவார்கள்.
ஆனால் நீ விழுந்தால் அது உன் குற்றமே.
எல்லாரும் திட்டித் தீர்க்குமும் உங்கள் முதுகைக் கொஞ்சம் காணுங்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Dec-19, 4:13 pm)
பார்வை : 715

மேலே