இது தான் நிரந்தர தீர்வு
இந்த சமூகத்தில் அதிகரிக்கும் ஒழுக்கமின்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றீர்கள்?
அதை கட்டுப்படுத்த இயலுமென நினைக்கிறேன் என்றேன்.
எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள் என்றீர்கள்?
மனிதன் தன் புலன்கள் மீது ஆதிக்கம் செலுத்த வழிகாட்டினாலே போதும்.
ப்ரம்மச்சரிய வாழ்க்கை முறையை மனிதர்களிடையே அறிமுகம் செய்ய வேண்டும், என்றேன்.
ப்ரம்மச்சரியம் என்பது இந்துக் கொள்கைகளாயிற்றே!
அப்படியெனில் இந்துத்துவாவைச் சேர்ந்தவரா என்கிறீர்கள்?
குற்றங்கள் முளைவிடாது தடுக்கும் வழிமுறைகளை எந்த மதம் குத்தகைக்கு எடுத்தது?
அதைக் காட்டுகிறீர்களா? என்றேன்.
மூடிய உங்கள் வாய்கள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றன.
கூறுங்கள் மதவாதிகளே!
அன்பு எந்த மதம்?
கருணை எந்த மதம்?
ஒழுக்கம் எந்த மதம்?
பொறுப்புடைமை எந்த மதம்?
உங்களுடைய காப்பீட்டு உரிமத்தைக் காட்டுங்கள் திருடர்களே!
வயிறு பசித்தால் உணவைத் தேடி உண்பானே தவிர அது எந்த மதத்தவன் தயாரித்த உணவு, இது எந்த மதத்தவன் தயாரித்த உணவு என்று கேட்பதில்லை.
அதுபோல குற்றங்களைக் களைய மத வேத ஆராய்ச்சி தேவையற்றது.
எளிமையான கொள்கைகளே மத பேதமின்றி தேவை.
புரிந்ததா குதர்க்கவாதிகளே!