மனமே மாய மனமே
மனமே மாய மனமே மயக்கங் கொள்ளாதே
மனதால் நெகிழ்ந்து மதியை ஒதுக்கி வைக்காதே
மனிதர்கள் துர்செயல்களால் அதிர்ச்சி அடையாதே
மயங்கும் அளவு துயர்வரினும் துவண்டுவிடாதே
எவ்வகை துயர் வந்த போதும் எள்ளவும் மிரளாதே பல்வேறு சோதனையில் சிதைந்தாலும் விரைந்து எழு
படிப்படியாய் அனுபவத்தை பக்குவமாய் பெற்றிடு
பரவியிருக்கும் காற்றில் பயணிக்கக் கற்றுக்கொள்
பகல் இரவு இரண்டிலும் பாரபட்சமின்றி உழை
ஏன் என்று எவ்வகை செயலையும் கேள்விக் கேள்
யாசகம் எடுப்பதில் படிப்பினை முதலில் வை
யாரை நம்பினாலும் எச்சரிக்கையாய் இரு
யானைப் போல் யார் எதிர்ப்பினும் நீதி வழியில் நில்
---- நன்னாடன்.