வழியெல்லாம் கீத நீரோடை

பிருந்தா வனக்கண்ணா நின்வேணு கானம்
அருந்த அருந்த அலுத்திடவே இல்லை
விருந்தா னதுகீத மாய்என் செவியில்
மருந்தா னதுமன தில் !

குழல்காற்றி லாடராதை வந்தே அமர
குழல்தடவி நீஇசைக்க கார்நிறக் கண்ணா
குயில்கள் மரக்கிளையில் பாட மறக்க
மயில்மட்டும் ஆடியதங் கே !

பாவைரா தையழகில் தன்னையே நீமறந்தாய்
கோவையிதழ்ப் புன்னகையில் கீதம் இசைத்தாய்
பொழியும் இசையினில் பூக்கூட்டம் ஆட
வழியெல்லாம் கீதநீரோ டை !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-19, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே