கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா/
அன்றே கண்ணுறக்கம்
இழந்தேன் நானம்மா/

கண்கள் என்னும்
மெத்தை போட்டு/
இமைக்
கதவைத் தாழ் இட்டேன்/
காதல் என்ற
காவலனைக் காவலிட்டேன்/

ஆனந்தக் கண்ணீரிலே
உம்மை நீராட்டி/
இதயத் தொட்டிலில்
மெதுவாகச் சீராட்டி/
என் சுவாசத்திலே உன்னை இயக்குகின்றேனம்மா/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:05 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 104

மேலே