உனக்காகப் பூத்திருக்கிறேன்

கோயம்புத்தூர் கொண்டை
ராமன் கேட்டுக்கிட்டாரு/
கொழுந்து வெத்தல
தோப்புக் காரனும் /
கொழுந்தனாரைக் கையோடு கொண்ணுக்கிட்டு வந்தாரு/

சிவகாசி பட்டாசுக்
காரனும் மகனுக்கு /
பரிசம் போட்டுக்கச்
சொல்லி நின்னாரு/
அப்பனும் ஆத்தாவும் ஆமா போட்டுக்கிட்டாங்க/

பயபுள்ள எவனாச்சும்
யெம்பக்கம் வந்துக்கிட்டா/
வெட்டிப்புடுவேன்
யென நெனச்சுக்கிட்டேன்/

பொன்னோடு பூக்
கொண்டுக்கிட்டு வந்தாலும் /
ஒன்னைய விட்டுக்கிட்டு
போவேனோ மச்சான்/

கண்ணாத்தா பொன்னாத்தா அழைச்சுக்கிறப்போ என்னைய/
ஒம் பேரையும்
இணைச்சுக்வாங்க மச்சான்/

பிஞ்சுல வெள்ளாடினோம்
பருவம் வந்ததும்/
இருவரும் கண்ணாலே
இதயத்தைக் களவாடினோம் /

களத்து மேட்டுக் காதல் கனவாக/
கலைஞ்சுக்காது வேளாண்மையாக விளைஞ்சுரிச்சு மச்சான்/
உன் அத்தை வீட்டு மொட்டு
சொத்தாய் உனக்காகப் பூத்திருக்கு மச்சான்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:13 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 102

மேலே