நிழலாக நான் வருவேன்

என் விழியில் விழுந்த
சின்னவளே/
இதயத்தின் உள்ளே நுழைந்த
கனியமுதே/
இல்லற வாழ்வின் நல்லுறவான என்னவளே/
நான் நுகர்ந்திடும் சாமத்து
மலரே/
என்னுயிரின் சரி பாதியான நந்தவனத் தேரே/
உன்னை உதறிடுமோ? எந்தன்
நெஞ்சம் /
என்றும் நிழலாகவே நான்
வருவேன்/