மாந்தோப்புக் கிளியே

மந்தாரச்சிலையே யம்மா
மாந்தோப்புக் கிளியே/
தெம்மாங்கு பாடிக்கிறேன்
ஆடிக்கிறாயோ மயிலே/

மறைவிலே குண்டு
மாங்காய் மணக்குதே/
கிளையை உசுப்பிக்கவோ
கையாலே பறிச்சுக்கவோ?
பார்த்துக்கிட்ட அணிலும்
கடிச்சிக்கத் துடிக்குதே/

வடுமாங்காய் வத்தலுக்கு
உகந்ததாம் புள்ள/
கெட்டுக்கும் முன்னே
உப்பிட்டுக்கலாமா புள்ள/

புல் அறுத்துக்கையிலும்
நெல் அறுத்துக்கையிலும்/
கல் அடுக்கிக்கையிலும்
சொல் உரைக்கையிலும்/

முழுப் போதையிலும்
முதுகு தேச்சுக்கையிலும்/
செவலப்பொண்ணு
ஓண் நெனப்புத்தான்புள்ள/

பொடலாங்காயத் தொட்டுக்கிட்டா
ஓங்கையாட்டம் தோணுது/
வெண்டக்காயப் பாத்துக்கிட்டா
விரலாட்டம் இருக்குது/

அனலுக்கு நானும்
குடையாவேன் புள்ள/
குளிருக்கு போர்த்திக்கும்
போர்வையாவேன் புள்ள/

மழைக்குத் சூடேத்திக்கும்
தீயாவேன் புள்ள/
வெல்லத்தோடு பச்சரிசிமாவாய்
இணைஞ்சுக்குவேன் புள்ள/

மாந்தோப்புக் கிளியே
கண்ணுக்கிட்ட நொடியே/
மயங்கிக்கிட்டது யென்
நெஞ்சமடி கன்னியே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:20 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 69

மேலே