என்னைச் சாய்த்தது உந்தன் பெயரே

பூங்காற்று மயக்காத புளியமரம் /
சுழல்காற்று வீழ்த்திடாத மதுரமரம் /

அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம்/
பெண்ணைக் கண்டால் ஒதுங்கும் நெஞ்சம்/
வெறுப்பும் முறைப்புமே என்னில் தஞ்சம்/

வேப்பங்காய்க்கு ஒப்பாய் காதலை வைத்தவன்/
சம்சாரி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி இட்டவன்/

எத்தனையோ விழியம்பு சாய்க்காத ஆலமரம் /
சாய்ரா உன் பெயர் கேட்டதுமே சாய்ந்ததடி/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 5:20 pm)
பார்வை : 118

மேலே