சொல்லாமலே♥️

சொல்லாமலே 💔.

காதலை சொல்லாமல் கண்ணாமூச்சி ஆடுகிறேன்.
காளை அவன் பாவம்
என் காதலுக்காக
கால் கடுக்க தினம் ஏங்குகிறான்.
கண்ணாளன்,
என் ராஜகுமாரன், கச்திதமானவன்.
அவன் காதலை எப்படியோ என்னிடம் தயக்கமுடன் சொல்லிவிட்டான்.
என் இதயத்தில் காதல் அம்புகளை எய்திவிட்டான்.
என் சம்மதம் அவனை ஆனந்த படுத்தும் அதில் எந்த வித ஐய்யமும் இல்லை.
ஆனால் எனக்காக வேண்டி அவன்
காதல் காத்திருப்பு
என்னை புல்லரிக்க செய்கிறது.
தினம் அவன் நகம் கடித்து ஆவலுடன் என்னை எதிர் நோக்கும் அந்த பார்வை....
என்னை எங்கேயோ எடுத்த செல்கிறது.
என்னை உனக்கு அவ்வளவு படிக்குமா? என்ற கேள்வி என்னுள் எழுந்து ஆனந்தம் அடைந்த நான்
ஆயிரம் வண்ணத்து பூச்சிகளுடன் வட்டமடிக்கிறேன்.
தூரத்தில் நான் வரும் போது அவன் தன் தலை முடியை தன் விரல்களால் கோருவது
அய்யகோ! எப்படி சொல்வது
மன்மதா இந்த மங்கை உனக்கு தான், உனக்கே தான்...
என்று சந்தோஷம் நிறைந்த என் நெஞ்சில் இருந்து உறக்க சொல்வேன்.
அது அவன் செவிகளில் விழ வாய்ப்பு இல்லை.
மங்கையாக பிறந்ததிற்கு மா தவம் செய்திட வேண்டும்.
உண்மை தான்
ஆணின் அலைவரிசையை அளவு பார்ப்பதில் பெண்னினம் பெயர் போணது.
ஆண் அழகனே!
விழித்திரு!
தவத்திரு!
பசித்திரு!
காத்திரு!
இந்த பா..வை உனக்கு தான்
காலம் கனியும் வரை
காதலை சுவைக்கலாம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Dec-19, 4:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 301

மேலே