முல்லை மலரும் ரோஜாவை

தூரிகை தொட்டுக் காட்டவேண்டிய அழகை
தொலைவில் தெரியும் நீலவான் நிலவெழிலை
காரிருளை கிழித்து வெளிப்படும் மின்னல் நிகர் விழியினை
ஓரிரு வார்த்தைகளில் எப்படி சொல்வேன் ?

பூக்கும் மலரெல்லாம் தோற்கும் புன்னகையை
புத்தம் புது புத்தகம் போல் திறக்கும் செவ்விதழை
செதுக்கிய சிலையும் திகைத்து நிற்கும் பேரெழிலை
என் கவிதை வரிகளில் எப்படி எழுதுவேன் ?

முல்லை மலரும் ரோஜாவை
கள்வடியும் கவின் மலரை
கற்பனையும் தொடாத கவிதையை
சொல்லில் எப்படி வடிப்பேன்
சொல் சொல் நண்பனே !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-19, 7:44 pm)
பார்வை : 59

மேலே