உள்ளாட்சி தேர்தல்

வந்துபோகும் தேர்தலும்
வெளிச்சமாக மாறனும்
வெள்ளை பேச்சி பேசியவர்
நல்ல ஆட்சி ஆளனும்

அழுக்குகளை அப்பாற்படுத்தி
விளக்குகளை போடணும்
குப்பைகளை விளக்கிடத்தான்
சிங்கப்பூராய் மாறனும்

உள்ளாட்சி தேர்தல் இது
நல்லாட்சியாய் மாத்திடனும்
ஊராட்சி நகர்புறத்த
பாலைவனத்தில் இருந்து மீட்டுடனும்

வெள்ளை வேட்டி
யாரு வேண்டுமானாலும் கட்டிடலாம்
கட்டியவர் நல்லவர்தானா என்று
வாக்குகளை பார்த்து குத்திடலாம்

சிந்தித்து வாக்களிப்போம்
சிதறாமல் சேர்ந்திருப்போம்
சந்தித்த ஒருவர்களில்
சத்தியத்தை தேடி எடுப்போம்

விரல்களின் மையால்
பொய்மையை திருத்திடுவோம்
கறைகளை துவைத்தெடுத்து
வெண்மையை அணிந்திடுவோம்

நமக்கானவர் யாரோ
அவருக்கே வாக்களிப்போம்
ஊராட்சியின் வறட்சிகளுக்கு
வாக்குகளால் நீர் தெளிப்போம்

BY ABCK

எழுதியவர் : (16-Dec-19, 9:11 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 668

மேலே