மல்லிகைப் பந்தலில் தென்றல் ஊஞ்சலாடுது
மல்லிகைப் பந்தலில் தென்றல் வந்து ஊஞ்சலாடுது
என் மனம் என்னும் பந்தலில் உந்தன் நெஞ்சமாடுது
கொஞ்சு தமிழ் பாட்டுப் பாடுது
காற்றில் உந்தன் கூந்தல் கலைந்தாடுது
கலைந்தாடும் கூந்தலில் மலர்களெல்லாம்
இடம் தேடுது
பூத்திருக்கும் மல்லிகையும் உன் புகழ் பாடுது
காத்திருக்கும் எனக்கும் ஒரு கவிதை கூறுது
பார்த்திருக்கும் வானமும்
நம்மை வாழ்த்திப் பாடுது
----கவின் சாரலன்