நெல்லு, கொள்ளு, எள்ளு

நெல்லு, பயிரின் தலையில் காய்க்கும்
நெல்லிக்காய், மரத்தின் கிளையில் காய்க்கும்
கொள்ளு, செடியின் மூடிய பையில் காய்க்கும்
எள்ளு, செடியின் திறந்த பையில் காய்க்கும்
புளியங்காய், உரையிட்டு கிளையில் காய்க்கும்
வரகு, ஏழு தோல் மூடி பாதுகாப்பாய் காய்க்கும்
மாங்காய், மானவரி மக்களாய் மரமெங்கும் காய்க்கும்
வேர்க்கடலை, உரையிட்ட பையில் மண்ணில் காய்க்கும்
பூசணி, சின்னக்கொடியில் தொங்கிக் காய்க்கும்
உயிர் தரும் உணவும் பயிரும் காய்க்கும் ஆதாரம் வேர்
உண்ணுகின்ற மனிதன் உற்பத்திக்கு உதவுவது ஏர்
உழவை உளமாற போற்றினால் பெருமை பெரும் ஊர்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Dec-19, 6:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 166

மேலே