அழகு காதல் மின்மினியே

கோபத்தில் நீயோ ஆண் மயிலாய்
கொஞ்சும் போதோ நீ ஒரு கருங்குயிலாய்
பேச்சினிலே அழகு பைங்கிளியாய்
பொய்யில்லா சொல்லில் அன்னப்பறவையாய்
பொறுமையில் நீயோ வெண் கொக்காய்
பாசத்தில் எப்போதும் காக்கை பிறவியாய்
சண்டையின் போதோ கொண்டை சேவலாய்
பழக்க வழக்கத்தில் நீயோ மணிப்புறாவாய்
காப்பதில் பெரிய நெருப்புக்கோழியாய்
தூக்கத்தில் என்றும் கூகை பறவையாய்
காதலில் என்றும் நீ சிறு காதல் குருவியடி
கண்டேன் உந்தன் காந்த விழியை நான்
மறந்தேன் என்னின் வாழ்க்கை முறையைத் தான்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Dec-19, 7:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 219

மேலே