காதல் யுத்தத்தைத் தூண்டியவளே

நீ போகும் பாதை எல்லாம் பெருஞ்சத்தம்
நிலவுக்கும் வந்ததடி உன் மேல் பித்தம்
தனித்து நீ செல்லாதே ஊர் எங்கும்
தவிர்க்க முடியாமல் நடந்து விடும் பெருங்குற்றம்
உடைக்குங்கூட உன் மேலே பெரும் ஏக்கம்
ஒவ்வொரு நொடியும் உன்னைக்காண ஊர்க்கூடும்
ஓயாமல் உன்னை நோக்கி கண்கள் ஓடும்
அழகு மலர்கள் உன் கூந்தல் சூட நினைக்கும்
ஆண்களின் இதயமெல்லாம் அலறித் துடிக்கும்
அரிய பெண்ணே உன்னை அடைய யுத்தம் நடக்கும்
- - - - -நன்னாடன்.