சங்கு கழுத்து செந்நிறத்தில்

பெண் எழிலே உன் அழகால்
விண் முகிலும் மழை பொழிய
தன் அழகை மலர் மறைக்க
தேன் வண்டு பாதை மாறி
உன் முகத்தை மலராய் நினைக்க
புல்லினங்கள் குதுகலித்து மகிழ்ந்திருக்க
தென்றலது ஆண் இனமாய்
தன்மை மாற்றி தழுவி அணைக்க
இறுக்கத்தினால் உன் இடையோ
விம்மி அதிர்ந்து வியர்வை வழிய
சங்கு கழுத்து செந்நிறத்தில் சிவந்து விட
பச்சை நரம்பு பலத்தைக் கூட்ட
புடைத்து எழ புது அழகில் காட்சித் தந்தாய் நீயே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Dec-19, 7:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1108

மேலே