நிலவொன்று துனணயிருக்க
நிலவொன்று துணையிருக்க..
பக்கத்தில் நீ இருக்க..
ஏக்கத்தில் நான் இருக்க….
கண்ணோடு கண் பார்த்து
சொர்க்கத்தை நீ உணர்த்த..
ஆழ்மனது ஆசையெல்லாம்
அள்ளித் தெளித்திருக்க…
மொழி பேச வழியின்றி..
விழி பேச மொழியின்றி...
உறவை நினைத்து..
உணர்வை அடக்கி….
கண்ணீர் நனைத்து..
இரவைக் கடந்தோம்...