விளம்பரங்கள்
புகை புற்றுநோயை உருவாக்கும்
குடிப்பது உடல் நலத்துக்கு கேடு
விளம்பரங்கள் பெரும்பாலும்
வியாபாரத்தை பாதிப்பதில்லை...
அவளுக்கும் மனசாட்சி இருக்கிறது
அவளும் எழுதி வைத்திருக்கிறாள்
அவள் வீட்டின் வரவேற்பறையில்...
அவளுக்கான வாடிக்கையாளர்கள்
கண்களில் பெரிதாய் படுமாறு
*எய்ட்ஸ் மிகக் கொடிய நோய்*
மதம் பிடித்தவர்கள் மனங்களில்
நுழைவதில்லை விளம்பரங்கள்...