கற்றுத் தந்த வாழ்க்கை

* யதார்த்தமாய் மௌனிக்கும் வேளையிலும்.., அசரீரியாய் அவன் நினைவுகள்..!
* இருட்டறைக் கண்ணீரில் இரையும் ஞாபகங்களில் "அவள்".
* கற்றுத் தேர்ந்த அனுபவங்களிடம் இறுதியாய் சேர்க்கப்பட்ட மரணக் கடிதம்..!
* சகாராவின் பிம்பங்களுக்குள் மறைந்து நீடிக்கும் அவள் நினைவுகள்..!
* சில நினைவுகள் விழுங்கும் இரவுகளிடம் போராடும் விழிகள்..!
* கண்ணீர் சாயல்களிடம் ஏற்க மறுக்கும் பகலவன் விடியலிலும் மெழுகுதிரியின் ஒளி..!
* விற்றுப் போன பல சுமைகளுக்கு.,
உரிமையாளனாய் இன்னும் "சில நினைவுகள்"
* கரைந்து போன மௌனங்களிடம் துக்கம் அனுசரிக்கும் உறுத்தல்கள் சில...
* உரைந்து எஞ்சிய உயிர்த்துளிகளில் உணராத அவன் நினைவுகள்..!
* கல்லறைக் கனவுகளாய் அவனுடனான என் வாழ்க்கை..,
கிழித்துப் போட்ட காகிதக் கடிதமாய் அவன் வருகை..!
* தூரதேச மலர்களிடம் பெற்றுக் கொண்ட புன்னகையை..,
வழியில் சகாராவிடம் ஒட்டு மொத்தமாய் பறிகொடுத்த பட்டாம்பூச்சியின் சாயல்களாய்..."அவன் நினைவு"..!
* வழிநெடுக வளர்த்த வண்ணக் கனவுகளை கரிசல்காட்டுக்குள் புதைத்துவிட்டு மரணித்த "விட்டில் பூச்சி"..!
* மிளிரும் காலைநேரம் எல்லாம் நெடுஇரவில் உப்புநீரில் குளித்த இமைகளின் இன்னல்கள் நீரோவியமாய் ஒளிந்திருந்தது..!
* ஒருமுகப் படுத்தப்பட்ட மனதும் சில கணங்களில் சிதறிப் போகிறது கூழாங்கட்களாய் எறியப்பட்ட "அவன் நினைவுகள்"..!
* கடன் சுமைக்குள் மூழ்கிப் போன ஏழையிடம் நேரம் கூட நிர்கதியாய்..,
"சுவர்க்கடிகாரம்"..!
* மாணவியின் தொடுவானக் கனவுகள் பரிகாசமாய் சிரித்தன..,
மிளிராத ஏழைவீட்டு மின்விளக்கை பார்த்து..!
* வறுமைக்குத் தாலாட்டுப் பாடும் நிலவிடம்.., ஏழைவீட்டு மழலையும் தஞ்சம்..!
* சில்லறைக்காய் கையேந்தும் ஏழ்மையிடம்.., ஏளனப் பார்வையும் கொலைக்குற்றமாய் எழுதப்படுகிறது..!

எழுதியவர் : சரண்யா (21-Dec-19, 5:23 pm)
பார்வை : 384

மேலே