வாழ்ந்துபார் நீயும் ரசிப்பாய் வாழ்க்கையை 555

தோழா [ழி]...
தற்கொலைக்கு செல்லும்
தோழமையே சற்றுநில்...
சிந்தித்து பார் உன்னை
கொடுமைபடுத்தியது யாருமில்லை...
உனக்கு நீயேதான்...
நீ வெறுத்து செல்லும் நிகழ்வுகள்
எல்லாம் வேடிக்கையானவை...
சாதிக்க வேண்டுமா
அவமானங்களை தாங்கிக்கொள்...
வெற்றி உன்
இலக்கு என்றால்...
தோல்விகளை
தாங்கிக்கொள்ள
தாங்கிக்கொள்ள
கற்றுக்கொள்...
உன் வாழ்க்கையை
தீர்மானிப்பது நீ மட்டும்தான்...
வலிகளை தாண்டிவந்த
உன்
பாதையை நீ திரும்பிப்பார்...
பாதையை நீ திரும்பிப்பார்...
இப்போதுசொல்
தற்கொலைதான் உன் முடிவா...
வாழ்க்கை வாழ்வதற்கு
தோழமையே வாழ்ந்துபார்...
நீயும் ரசிப்பாய்
வாழ்க்கையை.....