கணிதக்கலைஞன்
கணிதக்கலைஞன்
எண்கள் எண்ணியே எண்ணங்கள்!
பின்னங்கள் பின்னரே சிந்தனைகள்!
சூத்திரங்கள் சூழ்ந்தே ஆய்வுகள்!
கோட்பாடுகள் குறித்தே கருத்துக்கள்!
தேற்றங்களின் தேக்கமாய் நினைவுகள்!
கணக்குகள் சார்ந்தே கனவுகள்!
கணிதத்திற்கும் அவனுக்கும் இடையே
கால் புக இடமில்லை!
கணிதம் தாண்டிய அவன் சிந்தனைக்கு
ஞாலத்தில் தடமில்லை!
முடிவிலியும் பூஜ்யமும்
அவன் ஆய்வுப் பொருளாகும்!
முழுமையுற்ற அவன் அறிவு
இறையாற்றல் அருளாகும்!
மேதையின் வாழ்வை கடிதில் முடித்து
களங்கம் ஏற்றது காலக்கணிதம்!
புகழுற காலம்காலமாய் வாழவைத்து
பெருமிதம் கொள்கிறது எண்கணிதம்!
(கால்-காற்று,ஞாலம்-உலகம்,முடிவிலி-infinity,தேற்றம்-theorem)