முக்கானி பின்னத்தோடு

கிராமத்து கினற்றுக்குள்ளே
சுற்றி திரிந்த பள்ளிபருவம்
காடையம்மா பாட்டியைத்தான்
அவ்வையாக நினைத்துக்கொள்வேன்
அரிது அரிது என் பாட்டியாக
பிறப்பது அரிது
எளிது எளிது
என் பாட்டியிடம்
கணிதத்தை கற்பது எளிது
கால் அரைக்கால்
முக்கானி பின்னத்தோடு
ஒட்டுத்தின்னையில
கால்பின்னி வெற்றிலை
ஒலக்கில பாக்கிடுத்து
பாக்கின் தன்மையை
என் மனசில
பக்குவமாய் பதியவைப்பாள்
என் பாட்டி காடையம்மா
பாட்டியில்லாத என்வீட்டில்
பிள்ளைகள் பைசூஸ்ஸை (BYJUS) கற்றாலும் பன்பாட்டை கற்றுத்தந்த
என் பாட்டிபோல வருமா?

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (23-Dec-19, 4:56 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 75

மேலே