காத்திருப்பு

இன்று எப்படியும் வந்து
விடுவாய் என்ற

நினைப்பில் வளர்பிறையாய்

உனக்காகவே நான் அழகாக
பௌர்ணமியாய்

காத்திருப்பு தந்த ஏமாற்றத்தில்
தேய்பிறையாய்

இனி பலன் இல்லையென

நம்பிக்கை இழந்தேன்
அமாவாசையாய்

எழுதியவர் : நா.சேகர் (27-Dec-19, 8:45 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaathiruppu
பார்வை : 460

மேலே