செந்தாமரையில் ஒரு செவ்வானம்
செந்தாமரையில் ஒரு செவ்வானம்
காற்றில் சாயந்தாடும் சங்கமமே உன் செந்தழகை சொட்ட விட்டு, தண்ணீர் முழுதும் தத்தெடுத்தாயோ...!
இதழ் மடல் எங்கும் பிரதிபலிக்க சலசல அலை வரியில் மொட்டு அரும்பு என மாறிவிட்டாயோ...!
குளிர் காற்று பணி சாரலை பரப்பிவிட, நாணலும் கோரையும் உன்னுடன் சேர்ந்து ஆடுதம்மா...!
ரேகை தட்டுகள் தள்ளாட, அதில் குழிழ் மொட்டுகள் சருக்கி ஓடுதம்மா...!
உன் ஓரப்பார்வை சாய்ந்திருக்க ஆதவன் செவ்வ சிரிப்பாய் பணி படலப்போர்வையில் ஊடுறுவி உனக்காக உதிக்கிறானோ...!
ரீங்கார வண்டினம் உன்னை சுற்றி வசைப்பாட...
வானம் பாடி இசைப்பாட...
திசை காற்று தாலாட்ட...
எட்டாதுயிருமப்பவனை கட்டிபோட...
உன் மகரந்த பார்வையால் உற்று நோக்குறியோ...
✍By Mani💃💃