நீ தான் வேண்டுமடி எனக்கு
களங்கமற்ற உன் முகத்தையும்
காந்தர்வச் சிரிப்பையும்
கண்ட கணம் முதல்
நீ தான் கண் முன்னே வருகிறாய்
நான் தேனும் கனியும் கலந்த
பழச்சாறு உண்டது போல
தித்தித்துப் போகிறேன்
சில வேளை கசக்கி
விட்ட காகிதமாய்
கலங்கிப் போகுதடி என் மனசு
கடிகார முள் போலே
உன்னையே சுற்றிச் சுற்றி வந்தும்
இன்னும் நெருங்க முடியவில்லையே
என்னு ஆதங்கம் வரும் போது ....
அஷ்றப் அலி