காரல் மார்க்ஸ்

அது சிவப்பு புத்தகம்
அல்ல சிறப்பு புத்தகம்
ஏனென்றால்
அது புத்தகம் கொண்ட
காரல் மார்க்ஸ் எழுதிய புத்தகம்

இந்த நெருப்பு புத்தகத்தை
எழுதிய நாள் முதல்
இறைவன் அவரை நெருப்புப் படுக்கையில் நடக்க வைத்தான்
ஆனால் இறைவன் அறியவில்லை
அந்த நெருப்பின் வெப்பத்தை விட இவன் பாதங்களின் வெப்பம் அதிகம் என்று

படிக்கும்போது
அதிக மார்க் பெற்றேன்
அப்போதெல்லாம்
கிடைக்காத இன்பம்
காரல் மார்க் பற்றி படித்த போது கிடைத்தது

அனைவரும் மணம் செய்து ஒருத்தியோடு லயணம் செய்தனர்
இவர் மட்டும்தான் சிவப்பு புத்தகம் எழுதி
உறுதியோடு ஒரு தீயோடு பயணம் செய்தார்

அவர் தன் மனதில்
சேர்த்து வைக்க கேட்ட
ரேட் காம்ரேட்

அவர் குழந்தை பிறந்தபோது
தொட்டில்
வாங்க காசு இல்லை
இருந்தபோது கட்டில் வாங்க காசு இல்லை
இறந்தபோது சவப்பெட்டி வாங்க அவரிடம் காசு இல்லை
இன்று அவர் புகழுக்கு
ஈடாக வைப்பதற்கு
எந்த பெட்டியிலும் காசில்லை

அவர் முகத்தில் தாடி வைத்தவர்
முதலைப் போட்ட முதலாளி எனும்
முதலைகளின் முதுகில் தடி வைத்தவர்

காரல் மார்க்சின் எழுத்து வீரமாக இருந்ததோ இல்லையோ வறுமையை சுரண்டும் முதலாளிகளுக்கு காரமாக இருந்தது

ஜெர்மனியில் பிறந்த இந்த மணிதான் கட்டினார் அதிகார வர்க்கம் எனும் பூனைக்கு மணி

இவர் சுத்திக்கு பக்கத்தில் அரிவாள்
வைத்தார்
பணக்காரர்களின் புத்தியின் பக்கத்தில்
சமத்துவத்தை
தன் அறிவால் வைத்தார்

தனக்கென்று உடமை எதையும் சேர்த்து வைக்காது பொதுவுடைமையை தன் சொத்தாக சேர்த்து வைத்தவர்

இன்று ஏழையின் வயிற்றில் அடித்துத்தான் பலர் உண்கின்றனர்
இதனைப் பார்த்துக்கொண்டு கம்முனு இருந்தா அது அல்ல கம்யூனிசம்

தன் பசி தீர்ந்ததும் எஞ்சியிருக்கும் உணவு பிறர் உடையது இதுவே கம்யூனிசம்

எழுதியவர் : குமார் (1-Jan-20, 1:43 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 111

மேலே