உன்னோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன் 555

என்னவளே...
நீ அழுவதை
கொஞ்சம் நிறுத்து...
எப்போதும் போல்
என்னிடம் அன்பாக பேசு...
உனக்காக உறங்காமல்
இரவெல்லாம் விழித்திருக்கிறேன்...
நீ என்னைவிட்டு
சென்றுவிடாதே
துடித்துவிடுவேன்...
துடித்துவிடுவேன்...
நேரில்தான் முடியவில்லை...
கனவில் உன்னோடு
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...
என் கனவுகளுக்கு
கால்கள் இல்லையடி...
அதனாலதான் இன்னும் கண்ணுக்குள்
இருந்து கரையேற தெரியாமல்...
என்னைப்போலவே என்
கனவுகளும் துடிக்குதடி கண்ணே...
நித்தம்
நித்தம் உனக்காக.....