கோலங்கள்

ஒழுங்காய் வராது ஒருநிலாவும்
ஒருசில நாளில் மறைந்துவிடும்,
எழுந்தன மார்கழிக் காலையிலே
எழிலுடன் நிலத்து நிலவுகளே,
அழுது வடியும் பனியினிலும்
அழகுக் கோலமாய்த் தெருவினிலே,
எழுதிய ஈசனும் அதிசயிக்க
எழுதினர் பல்வகைக் கோலங்களே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jan-20, 6:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே