தைத்திருநாள் எங்கள் தமிழர் திருநாள்

பஞ்சபூதங்களில்
நெருப்பின் மூலனே
உன்னொளியால்
உயிர்களுக்கெல்லாம்
வெப்பம் தந்தாய்
பயிர்களுக்கு எல்லாம்
உணவும் தந்தாய் 
கதிரவனே நன்றி! நன்றி!!

வானம் பார்த்த கண்களெல்லாம்
பூத்து போனது சில ஆண்டு
உன் கருணையால்
இன்று பொழிந்தாய்
குளம் நிறைத்தாய்
வளம் அளித்தாய்
வருணனே நன்றி! நன்றி!!

உன் மேனி கீறி
உழுது விதைத்து
தண்ணீர் விட்டுக்
காத்திருந்தோம்
மேனி எங்கும் பச்சை
பூசி எழுந்தாய்
நிலமகளே நன்றி! நன்றி!!

சிப்பிக்குள் விழுந்த நீர்
திரண்டு முத்தாதல் போலே
உன் நெற்றித் திரளும்
வியர்வை எல்லாம்
மண்ணுக்குள் விதைத்து
பொன் விளையும் பூமியாக்கும்
உழவனே - உலகின்
தலைமகனே உமக்கும்
நன்றி! நன்றி!!

உழவுக்கும் உழவனுக்கும்
உறுதுணை நின்றிட்ட
ஆவினம் மாவினம்
அனைத்திற்குமாய்
நன்றியுரைக்கும் ஓர்நாள்
இவ் வறுவடைத்திருநாள்
எங்கள் வீரத்தமிழர் திருநாள்....

எழுதியவர் : முகில் (11-Jan-20, 8:20 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 154

மேலே