போல் வாழும் மனசு
தூங்குவதுபோல்
விழித்திருக்கிறேன்
விழித்திருப்பது போல்
தூங்கியிருக்கிறேன்
பிடித்ததுபோல்
பருகியிருக்கிறேன்
வெறுப்பது போல்
தவிர்த்திருக்கிறேன்
சிரிப்பது போல்
நகைத்திருக்கிறேன்
அழுவது போல்
நடித்திருக்கிறேன்
இருப்பது போல் இல்லாமல்
இல்லாதது போல் இருக்கிறேன்
தோள் மேல் சாய்வது போல்
'போல்' மேல் சாய்கிறது மனம்
பலமுறை பிறருக்காகவும்
சிலமுறை எனக்காகவும்