அழைத்தேன் வரவில்லை

அழைத்தேன்,
வரவில்லை
மிரட்டினேன்,
பணியவில்லை
கெஞ்சினேன்,
பலனில்லை
சாட்டை எடுத்தேன்,
சட்டை செய்யவில்லை
விலகிப் போகிறது,
பிரிய நினைக்கிறது
கற்பனை குதிரை ,
கையில் அகப்படாமல்
சிந்தனைத் துளிகள் ,
சிதறுண்டு வீணாகிறது
எடுக்கவும் முடியவில்லை,
எழுதவும் முடியவில்லை
சேமிக்கவும் இயலவில்லை,
சேர்த்தவையும் காணவில்லை !
பழனி குமார்
11.01.2020