தமிழர்களின் பொங்கல் வாழ்த்துக்கள்

கரிசல் மண் நிலத்தினிலே
காளைகள் இரண்டைப் பூட்டி
கடுமையாக நிலத்தைக் கீரி
குளிர்ச்சியாக நீரைப் பாய்ச்சி
மணங்கமழும் அழகு சேறாய்யாக்கி
குடும்பத்தாரோடு விதைக்கு படையலிட்டு
சேற்றில் நெல் விதையையிட்டு
செழிப்பாய் பயிரை விளைய வைத்து
சிவந்து பழுத்த நெற்கதிர்களை
அறுத்து குவித்து களத்தில் சேர்த்து
அள்ளி உரலிலிட்டு அரசியாக்கி
மண் பானையில் உலையை வைத்து
மஞ்சள் கிழங்கை பானை கழுத்தில் கட்டி
வெள்ளைப் பொங்கல் பொங்கும் போது
விண்ணின் மேகம் திரண்டு வந்து
எங்கும் மாரி பொழிந்ததைப் போல்
எல்லா இடத்திலும் மகிழ்ச்சி பொங்க
கோள புவியின் ஆதிகுடியான வீரத்தமிழனின்
தைத் திங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-20, 6:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 79

மேலே