உழவன்
உழுதான் பின் தொழுதான்
தாள் கண்டு
திளைத்தான் அவன்
உழவன்..
பொன்னேர் செய்தான்
புதுமனையாள் கூட சேற்றுவயலிறங்கி செம்புனல்நனைந்து
நாற்றோடு களித்தான்..அவன்
தலைவன்..
மஞ்சள் விதைத்தான் உடன்
கட்டிக்கரும்பும்
விதைத்தான்..சிறுமணித்தானியம்
சமைத்தான்
அங்கோடும் ஆற்றோடு
மூழ்கித்தன் சுமையெல்லாம் சுகமாக்கி வந்தான்
அவன் தமிழன்..
உழும்மாடு தொழுவத்தை
தன்குடிலாய் இருத்தி
ஆடுகோழி அனைத்திற்கும்
குடும்பமென நின்றான்
இளந்தளிர் வரும் நாளினையே
எதிர்பார்த்திருந்தான்
அந்த கிழவன்..