அவன் பிதற்றல்

உன்னைக் கண்டுகொண்ட இந்த
கண்களுக்கு உன்னை மறக்க தெரியலையே
நீ இல்லாத போது கூட நீ வந்து சென்ற
இடத்தையே பார்க்கிறதே நீ வருவாயோ
மீண்டும் காட்சித் தருவாயா என்ற ஏக்கத்தில்
நீ இன்னும் வாராதுபோனால் என் செய்வேன் நான்
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்லவேஜடம்போல் n
வருவாய் வருவாய் என் கண்கள் கண்டு மகிழ்ந்த
கண்ணழகியே வந்து உன் கண்கள் திறந்து
என்மீது பார்வையும் தருவாயா தந்து என்னுள்ளத்தில்
உறையும் உன்னுருவத்தை நீயே பார்த்து
உன்மீது நான் கொண்ட காதலை அறிவாயோ
அறிந்து என் காதலை ஏற்றுகொள்வாயோ
உன் காதலுக்காக ஜடம்போல் நடமாடும் எனக்கு
உன் பார்வையால் ஜீவன் தந்திடுவாயோ
என்னை உன் காதலனாய் ஏற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jan-20, 5:03 pm)
பார்வை : 75

மேலே