ஜீவன் முக்தி
பாடுகிறாள் பாடுகிறாள் மீரா
கண்ணனே மணிவண்ணனே
வாராய் வாராய் என் மனதில்
வந்து தங்கிவிடு நான் உன்னோடு
ஒன்றாய்க் கலந்துவிட .....
ஆடுகிறாள் மீரா ஆடுகிறாள்
தன்னையே ஆனந்த ராதை
என்று எண்ணி .... ஆடுகிறாள்
பாடுகிறாள் மீரா ஆனந்த ராகங்கள்
ராதை அவள் கண்ணனைத் தேடி
மீரா, கண்ணனே நான்தான் உன் ராதை
என்கிறாள் தன்னை மறந்து தான்
மீரா என்பதை மறந்து .....
கண்ணனும் காட்சி தருகிறான் அங்கு
மீராவிற்கு ...அவளை ராதாவாய்
ஏற்றுக்கொண்டு..... மீரா ராதாவாகிறாள்
கண்ணனுடன் கலந்து கண்ணனும் ஒன்றாகி
யார் மீரா, யார் ராதா .... கண்ணா நீயே சொல்லு
ராதா... மீரா ...ஜீவன் கண்ணன் ஆத்மா
ஆத்மாவோடு ஜீவனுக்கு இப்படி உறவு