வெற்றி நிச்சயம்
உவர் நீரில் வாழும் கடல் மீன்
சுவர் ஏறி எலி தேடும் பூனை
உணவிற்காய் மரமேறும் புலி
மீனுக்காய் காத்திருக்கும் கொக்கு
வேடந்தாங்கல் கூடும் வேற்றுப் பறவை
சுடர் உன்னைச் சுடும்
இடர் இன்னல் தரும்
இடரில்லாமல் வாழ்க்கையா
சுடரில்லாமல் தீபமா
புயல் காற்றோ அடை மழையோ
இலட்சியத்தை அடையும் வரைப் போராடு
நிச்சயமாய் வெற்றி உன்னைத் தேடி வரும்
அஷ்றப் அலி