மார்கழி முத்து மாரி

மாதத்தில் நான் மார்கழி
என்றுரைத்தான் கண்ணபெருமான்
எத்தனை அழகிய மாதம் இது
சோலையின் இலைகளும்
கொடிகளின் இலைகளும்
காலைப்பொழுதினிலே முத்து முத்தாய்
பனிமலரால் பூமியின் மீது பொழிகின்றன
இது ஓர் காதல் பனிமுத்து மழை
ஆம் பூமித்தாய் மீது பெருங்காதல் கொண்ட
சோலை மரம் செடி கொடிகளாம் பிள்ளைகள்
தாய் பூமிக்கு இடும் முத்து அர்ச்சனை
கோயில் மணி இசையோடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jan-20, 1:55 pm)
பார்வை : 76

மேலே