போகி இன்று பொங்கல் திருநாள் முதல் நாள்
போகி திருநாள் இன்று பொங்கல்
திருநாள் முன்னாள்.......இன்று போய்
இப்படி தூய நீல வானையும் மனிதா
நீ மாசுபடுத்தி ஊரு விளைவிக்க
எண்ணி கையில் கிடைத்த குப்பைக்
கூளங்களை, பழைய வண்டி 'டையர் '
மற்றும் வேண்டா ரசாயனப் பொருட்களை
தீவைத்து புகைமண்டலம் உண்டுபண்ணுகின்றாய்
வானெல்லாம் இன்று புகை புகையே
உன்னையே நீ இதனால் வதைத்துக்கொள்வதேனோ
தெரிந்தும் செய்யும் இது குற்றமா
மடமையா, நீதான் பதில் சொல்ல வேண்டும்
இன்று போகி பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாட்டம்
பழையன கழிந்து புதியன புகுதல் வேண்டும்
இத்திருநாளில்......
நம்முள்ளத்தில் புகைமண்டலமாய் i சூழும்
கல்மிஷமாம் மலங்களை எரித்திடலாமே
இனிய நல்ல எண்ணங்களால் வேள்வித்தீயில்
நெய் விட்டு சுடர் வளர்ப்பதொப்ப......
நல்ல சிந்தனையால் நன்மைப் பயக்க
இனி வரும் 'போகி நன்னாளில்' இந்த
சிந்தனையை வளர்ப்போம் .... வேண்டாம்
இந்த விபரீத 'செயற்கை புகைமண்டல'
விளைத்தல்.. நலம் ஏதும் புகை இவை
ஊரு விளைவிக்கும் உயிர்க்கொல்லி
அறிந்தும் அறியாமல் இருப்பதுபோல்
செயல் படுதல் அறிவீனம் அல்லவா
சிந்திப்போம் செயல்படுவோம்
போகி திருநாள் இன்று நன்மைகள் செய்வோம்