கடவுச்சொல்லின் கடைசி எழுத்தாக

நீயும் நானும் ஒன்றாக இல்லாத
கடந்துபோகும் காலங்கள் ஒரு
உண்மையை சொல்லிப்போவது
புரிகிறது
நானும் நீயும் உடலால் மட்டுமே
பிரிந்தோமென
ஏன் தெரியுமா உன் பெயரின் முதல் எழுத்து
என்னோடே பயணிக்கிறது கடவுச்சொல்லின் கடைசி எழுத்தாக
எனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக