உயிர் இல்லாத என் இதயம் 555

என்னுயிரே...


வெண்மேகம் இல்லாத
வானம் போல...

தாமரை இல்லாத
குளம் போல...

புகைவண்டி செல்லாத
தண்டவாளம் போல...

நீ இல்லாமல் நான் தனிமையின்
கொடுமையில் வாழ்கிறேனடி...

என் வாழ்வில் வசந்தங்களை
வீசிசென்றவள் நீ...

என் வாழ்வின்
வழிகாட்டியும் நீதான்..

என்னால் தாஜ்மகால்
கொடுக்க முடியாது...

அன்பு நிறைந்த
என் இதயத்தை...

உனக்கு அர்ப்பணிக்க
முடியும் முழுமையாக...

என் உயிரானவளே...

நீ கொடுத்த இன்பங்களை
நீயே பறித்த தென்னடி...

என் இதயவாசல்
எப்போதும் உனக்காக.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Jan-20, 8:57 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1

மேலே