நகைச்சுவை

நகைச்சுவை இல்லாத இடமே இல்லை. எல்லா இடங்களிலும் உண்டு. சிரிக்க தெரியாதவர் மிருகம் என்பார்கள். மனிதனாய் பிறப்பதே அற்புதமான ஒன்று. நம்மை மிருகதிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இந்த நகை தான். நகையை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ? சுவையை விரும்பாதவர் உண்டோ? இரண்டும் ஒன்று சேர்ந்த இந்த நகைச்சுவையை விரும்பித்தான் ஆகவேண்டும்.
சிலர், எவ்வளவுதான் நகைச்சுவை சொன்னாலும் சிரிப்பதில்லை. " நீ என்னத காமடி சொல்ல, நா என்னத்த சிரிக்க" னு. சிரிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, முறைத்து பாப்பர். இப்படி பட்டவர்களை எவராலும் சிரிக்கவைக்க முடியாது. அவர்கள் அவர்களே காமடி சொல்லி தனிமையில் சிரித்து கொள்பவர்கள். இவர்களுக்கும் மட்டும்தான் ஏதோ கஷ்டம் இருப்பது போல், எப்போதும் சோகமாக இருப்பார்கள்.
சிலர், எப்போதும் சிரித்து கொண்டே இருப்பார்கள். "வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும்" என்பார்கள். அதற்காக, அவர்கள் நோயின்றி கஷ்டமின்றி இருப்பவர்கள் இல்லை. வாய்விட்டு சிரிக்கிற அந்த ஒரு நொடி நோய் விட்டு ஓடலாம். மீண்டும் வந்து ஒட்டுமா ஒட்டதா தெரியாது.
நகைச்சுவை, எத்தனையோ வகை உண்டு. சினிமா நகைச்சுவை நடிகர்களில் சிலரை பாத்தவுடனே சிரிப்பு வரும். வடிவேல் அவர்களை பார்த்தவுடனேயே குழந்தை முதல் எல்லோரும் சிரித்து விடுவார்கள். முகபாவனை கொண்டு மட்டுமே நகைச்சுவை சொல்வதும் உண்டு. மிஸ்டர் பீன் அவர்களின் முகபாவனை நகைச்சுவை. இதேபோல், செய்கை மூலம் நகைச்சுவை உண்டு. சார்லி சாப்ளின் நகைச்சுவை இவ்வகைதான். சிரிப்பதற்க்காக மட்டுமே சில காமடி உண்டு. சிரிப்போடு சேர்த்து சிந்திக்க வைக்கும் காமடியும் உண்டு.
எம். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா, விவேக் ஆகியோர் காமடி எல்லாம் சிரிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் சிந்திக்க வைக்கவும் செய்யும். ஆங்கிலத்தில் இதை satire என்பார்கள். சமூக அரசியல் பிரச்சினைகளை நகைச்சுவை மூலம் கருத்து தெரிவிப்பார்கள். சில பிரச்சினைகளை வெளிப்படையாக சொல்லமுடியாது. ஆதலால், சீர்திருத்தவாதிகள் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். இன்பமும் துன்பமும் அலைகளைப் போல் வந்து போகும். அவை வாழ்வின் இயற்கை. துன்பம் வரும் வேலையில் சிரி என்று சொன்னால் சிரிப்பது கடினம். நம் சிரிப்பு ஆறுதலாக இருக்கட்டும். பிறர் மனம் புண்படும் ஆயுதமாக இருக்க வேண்டாம்.

எழுதியவர் : Suruleeswari (22-Jan-20, 9:20 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
Tanglish : nakaichchuvai
பார்வை : 341

சிறந்த கட்டுரைகள்

மேலே