காலம் பதில் சொல்லும்

ஒருத்தன் வெள்ளையனே வெளியேறு... வெள்ளையனே வெளியேறு...என்று மகாபலிபுரம் கடற்கரையில் வெள்ளையர்களைப் பாா்த்து கோஷமிட்டான்....

காவல்துறை வந்தது...

ஏம்ப்பா... நீ எந்த காலத்துல இருக்க...? நிகழ்காலத்துக்கு வாப்பா... இப்ப வெள்ளையர்கள் நம்ம கெஸ்ட் மாதிரி.. அந்த மாதிரி கோஷம் போடக் கூடாது...

உடனே அந்த நபர்...
ஏன் சார் நான் மட்டும் தான் கடந்தகாலத்துல இருக்கனா...?
இன்னிக்கு சில பேர் அப்படிதா பேசிகிட்டு இருக்காங்க... அந்த காலத்துக்கு தேவையா இருந்த போராட்டங்களை இன்று அவமதிப்பா பேசுராங்க... ஒன்னும் மட்டும் புரிஞ்சுக்குங்க சார்... அறம் செய விரும்புன்னு ஔவையார் சொன்னதும் சரிதான்... ரௌத்திரம் பழகுன்னு பாரதியார் சொன்னதும் சரிதான்... காலத்திற்கேற்ப கருத்துக்கள் மாறுபடும்.. ஆனா நாம் என்ன நிகழ்காலத்துல மக்கள் நன்மைக்கு பேச போறோம்... மக்கள் நலனுக்காக செய்ய போறோம்... அப்டின்னு பேசறது தான் சார் முக்கியம்....

சரிப்பா... நீ சொல்றது சரிதான்... நீ கோஷத்தை விடு... தேர்தல் வரும்போது... நாணல் எது... ? பனைமரம் எதுன்னு...? தெரியும்...
அன்று காலம் பதில் சொல்லும்.....!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (27-Jan-20, 7:44 am)
பார்வை : 202

மேலே