கையெறி குண்டு

தம்பி நம்ம கட்சி புதுக்கட்சி. இதை நாடு முழுக்க விளம்பரப்பபடுத்தணும். அதுக்கு என்னடா செய்யறது?
@@@@@@
நமக்கு நல்ல முன் உதாரணம் இருக்குதண்ணே.
@@@@@
என்னடா தம்பி சொல்லற?
@@@@@
இரவு நேரத்தில உங்க காரு மேல கையெறி
குண்டு வீசணும்?
@@@@
கையெறி குண்டா? யாருடா வீசுவாங்க?
@@@@@
நாமதான் அண்ணே ஏற்படு செய்யணும்.
@@###
அப்பிடியா? எப்பிடி?
@@@@@
நம்ம அடியாளுங்க ரண்டுபேர்கிட்ட சொன்னாப் போதும்.
@@@@@
என்ன செய்யவாங்க?
@@@@@@@
அவுனுக முகமூடி அணிஞ்சிட்டு வந்து துணிக்குள்ள அதிக சத்தமா வெடிக்கும் பட்டாசை வச்சுக் கட்டி அதில தீ வச்ச உங்க கார் மேல வீசிட்டு ஓடிடுவானுக. டமால்னு சத்தத்தோட அது வெடிக்கும். சிசி டீவில எல்லாம் பதிவாகிடும். உடனே காவல் துறைக்கு புகார் தந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு பண்ணனும். அதிகாலையிலேயே நிருபர்கூட்டம். நீங்க "என் உயிருக்கு ஆபத்து. உரிய பாதுகாப்பு தேவை. எங்க கட்சி வளர்ச்சியைப் பொறுக்கு முடியாம யாரோ மர்ம நபர்கள் செய்த திட்டமிட்ட அச்சுறுத்தும் கொலை முயற்சி"-ன்னு சொல்லிடுங்க. இது நாளைக்கு காலை தொலைக்காட்சி செய்தியாகிடும். மாலை பதிப்பு நாளிதழ்கள்ல செய்தி வெளியாகும். நாளைக்கு எல்லா நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியா வரும். சில தொலைக்காட்சி நிருபர்கள் உங்கள பேட்டி காண வருவாங்க. நீங்க பதட்டமா இருக்கிறமாதிரி நடிச்சு நான் எழுதித்தர்றதை மனப்பாடமா ஒப்பிக்கணும்.
@@@@@@
இதுபோதுன்டா தம்பி நம்ம கட்சியை நாடே அறிய நல்ல வாய்ப்பு. அந்தப் பட்டாசுக் குண்ட வீசற பங்கள பக்கத்து மாநிலத்துக்கு போகச் சொல்லு. ஆறு மாசம் கழிச்சு வரச்சொல்லு.
@@@@@
சரிங்க அண்ணே.

எழுதியவர் : மலர் (27-Jan-20, 11:30 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 80

மேலே