இனிய காற்றொன்று
கண்ணுக்குள் நிழலாக
நெஞ்சுக்குள் நிஜமாக
ஒன்னுக்குள் ஒண்ணாக
உன் நினைவுகளில் நான்
உன் கடைக் கண் பார்வை
பட்டுவிட்டால் போதும்
ஆனந்த ஆரோக்கியம் என்னுள்,
உனக்கும் புரியும்
உன் உதட்டு சிரிப்பில்
என் இதய சிறகு பறப்பது
சொல்லாமல் சொல்லும் கண்கள்
காதலை மட்டும் சொல்லிவிடும்
அந்த பருவமும்
படைத்தவன் பெருமையல்லவா
நினைத்தாலே இனிக்கும்
இனிய காற்றொன்று இதயத்தில்,
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
பருவம் அதுவல்லவா
இனம் புரியாத நேசம் பாசம்
எங்கிருந்து வருகின்றதோ /
இறைவன் விளையாட்டில் இதுவுமொன்று