சகி

தேன் துளியின் இனிமை இவளோ, மெல்லிசையின் மௌனம் இவளோ
கார்மேக குளிரும் இவளோ, கயல் விழி பார்வை இவளோ
நீரூற்றின் சாரல் இவளோ, வானவில்லின் வர்ணம் இவளோ
பறவையின் சிறகு இவளோ, பறந்து விரிந்த பிரபஞ்சம் இவளோ
பனிமூடிய பாதை இவளோ, மலர் விரிந்த சோலை இவளோ
கண்மூடிய கனவும் இவளோ, கலைப்பறிக்கும் தழையும் இவளோ
தடம் புரளும் பயணம் இவளோ, தாங்கி பிடிக்கும் காரிகை இவளோ
களவாடிய பொழுதுகள் இவளோ, கலங்க வைக்கும் பிம்பம் இவளோ
கரைந்திடும் காதல் இவளோ, சிதைத்திடும் வலியும் இவளோ
என்னை தொடர்ந்திடும் உயிரும் இவளோ என் சகி !

எழுதியவர் : ஹேமாவதி (4-Feb-20, 10:04 am)
சேர்த்தது : hemavathi
Tanglish : sagi
பார்வை : 161

மேலே