நேசிக்கின்றேன்

நான் பூக்களை விட
முட்களை நேசிக்கின்றேன்...
மழைத்துளிகளை விட
பெரு வெள்ளத்தை விரும்புகிறேன்..
வானவில்லை விட
மின்னலை காதலிக்கிறேன்...
பனித்துளிகளை விட
தீக்கதிரை அரவனைக்கிறேன்...
தென்றலை விட
புயலை ஆதரிக்கிறேன்..-ஆம்
இவைகளும் என்னைப் போன்று
பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (6-Feb-20, 8:05 pm)
Tanglish : nesikkindren
பார்வை : 439

மேலே