கனவு

மாடி ஒன்றல்ல..- ஐந்து அடுக்கு
மாளிகையில் வசித்தேன்...
வேலையாட்கள் ஒன்றல்ல..- நூறு
பேர் இருக்க வாழ்த்தேன்...
உடை ஒன்றல்ல..- ஓர் ஆயிரம்
இருக்க உடுத்தினேன்..
வாகனம் ஒன்றல்ல..-பல வகை
இருக்க பயணித்தேன்...
உணவு வகை ஒன்றல்ல..- அறுவகை
சுவையுடன் பருகினேன்..
உண்ட கலைப்பு உறக்கத்திலிருந்து
விழித்துப் பார்த்தேன்...- தெரு வீதியில்
நானும் நாயும் ஒன்றாய்...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (6-Feb-20, 6:57 pm)
Tanglish : kanavu
பார்வை : 2131

மேலே