எத்தனை நேசிப்பின் சந்தேகம்

இனியவளே...
முள்ளான கேள்விதனை கேட்டுவிட்டாய்..
குத்துதடி...அக் கேள்வி எனை குத்துதடி..
வேதனையால் குருதியும் கொட்டுதடி..

பெண்ணே..
வானம் பொய் என்றுச் சொல்..
வையம் பொய் என்றுச் சொல்..
கடலும் பொய் என்றுச் சொல்..
காட்சிகளும் பொய் என்றுச் சொல்..
எந்தன் காதல் பொய்
என்று சொல்லி விடாதே..- ஏன் எனில்
என்னுள் இருக்கும் நீயே
உனை சபித்து விடுவாய்...

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (7-Feb-20, 3:21 pm)
பார்வை : 160

மேலே