உண்டிக்கோல் கல்போலே

உணவை உற்பத்தி செய்யும் தொழில்
உருக்குலைந்தவாறே ஒவ்வொரு நாளும்

உற்சாகமூட்டும் பானத்தின் விலையோ
உண்டிக்கோல் கல்போலே உயர்வை நோக்கி

உணர்வு தொடர்பான ஆன்மீக கோட்பாடு
உதவாத வகையில் தினம் பேசும் பொருளாய்

இலவசமாய் கொடுத்திட்ட எல்லா செயலையும்
இறுதிவரையில் எதிர்பார்க்கும் பயனாளிகள்

உலக மாற்றத்திற்கேற்ப மாற்றங்காண முயலா அரசு
உயர்வை நோக்கி செல்லத்துணியா இளைஞர்கள்

வளர்ந்த மலையை சிதைக்கத் துணிந்த கொள்கை
வறண்டு தூர்ந்த நீர்வழியை செப்பனிட இயலா சட்டம்

இந்நிலை எம்முள் ஆறாவடுவை ஆக்கி துயரத்தை தர
இவ்வுலக ஐம்பூதங்களே உங்கள் ஆற்றலை காட்டுங்கள்.
- - - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (9-Feb-20, 2:46 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 80

மேலே